5. December 2008 05:59
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
21. August 2008 23:30
29. September 2008 22:52
12. October 2008 00:13
13. October 2008 13:01
கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. August 2008 07:42

ind_high_court.jpgகச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும், கச்சத் தீவில் மீன் வலையை உலர்த்தவும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்

சென்னையை சேர்ந்த பாண்டி லட்சுமி பொதுநலன் கருதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

28.6.1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்திய பிரதமர் இந்திராகாந்தியும், இலங்கை பிரதமர் பண்டார நாயகாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் பாக் ஜலசந்தியில் இரு நாடுகளுக்கும் இடையே கடல் எல்லையை நிர்ணயிப்பது தான்.

இந்திய மீனவர்கள் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கலாம் என்றும், அந்த தீவில் மீன் வலையை உலர்த்தலாம் என்றும், அங்குள்ள கிறிஸ்தவ கோவிலுக்கு செல்லலாம் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆகவே, கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு முழு உரிமை உள்ளது.

நடவடிக்கை எடுக்கவில்லை

1985-ம் ஆண்டு இலங்கையில் இனப்பிரச்சினை ஏற்பட்டபோது இந்த கச்சத் தீவில் பாதுகாப்பு கருதி இந்திய மீனவர்கள் வலையை உலர்த்த அனுமதிக்கவில்லை.

ஆனால், இதை இலங்கை அரசு தொடர்ந்து இன்னும் அனுமதியை மறுத்து வருகிறது. ஆனால், இதுகுறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 900 பேர் இதுவரை இலங்கை ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் உரிமையை காப்பாற்றுவது இந்திய அரசின் கடமையாகும்.

எனவே, 1974-ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும், கச்சத் தீவில் மீன் வலையை உலர்த்தவும், கிறிஸ்தவ கோவிலுக்கு செல்லவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசும், தமிழக அரசும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் இதுபற்றி பதில் தருமாறு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீசு அனுப்பும்படி உத்தரவிட்டனர்.

 

 
< முந்தைய   அடுத்த >