21. November 2008 13:10
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
29. September 2008 22:52
13. October 2008 13:01
19. August 2008 23:28
11. October 2008 23:48
புகலிடகோரிக்கையினை அங்கிகரிக்குமாறு சுவிஸ் அரசிடம் கோரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
22. August 2008 20:51

amnesty_international.jpgஅமெரிக்காவினால் கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக குவான்டனாமாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூவரினதும் புகலிட கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளுமாறு சர்வதேச மனித உரிமைகள் நிலையம் சுவிஸ் அரசாங்கத்தை கோரியுள்ளது.

இவர்கள் மூவரும் லிபியா,அல்ஜீரியா,சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாவர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுவிற்சர்லாந்தின் குடிவரவுகுடியகல்வு அதிகாரி ஜோனாஸ் மொன்டானி,

‘இந்த மூவரினதும் புகலிட கோரிக்கையானது ஏனைய வெளிநாட்டவர்களினது கோரிக்கையை போன்றே பரிசீலிக்கப்படும’; என தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சர்வதேச மனித உரிமைகள் நிலையத்தின் அகதிகளுக்கான இணைப்பாளர் கிராப்,

‘சுவிஸ் அரசாங்கம் இவர்கள் மூவரினதும் கோரிக்கையினை ஏற்றுக்கொள்வதன் மூலம்.இந்த பிரச்சினைக்கு ஒரு மனிதாபிமான முறையிலான தீர்வுக்கு வழியேற்படும் என தெரிவித்தார்.

அத்துடன் தாங்கள் குவாண்டனாமாவா சிறையை மூடுவதற்கு உதவியாக இருப்பதற்கும் தயாராக இருப்பதாகவும்’ தெரிவித்துள்ளார்.

‘இந்த மூவரும் தங்களது தாய் நாட்டுக்கு திரும்பினால் ஆபத்தை எதிர்கொள்ளநேரிடும்’ எனவும் கூறியுள்ளார்.

இவர் மேலும் கூறுகையில் இந்த மூவரும் 2001 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2002 இன் ஆரம்பத்தில் பாகிஸ்தானில் வைத்து கைதுசெய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவினால் குவான்டனாமாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 
< முந்தைய   அடுத்த >