| இளைய மாணவியர் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு |
|
|
| ரி.என்.ஜே | |
| 22. August 2008 23:45 | |
அண்மைக்காலத்தில் இளையோரிடம் பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளதாக மேற்கொள்ளபட்ட ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. 12 பெண்பிள்ளைகளுக்கு ஒருவர் பாலியல்ரீதியிலான துன்புறுத்தல்களால் பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் பெரும்பாலும் சக பள்ளித்தோழர்களாலேயே இத்துன்புறுத்தல்கள் நிகழ்வதாகவும் அவர்களில் அரைவாசிப்பேர் 18 வயதை எட்டாதவர்கள் என்றும் மேற்படி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காவற்துறையின் புள்ளவிபரங்கள் இவ்விடயத்தில் நிஜத்தை பிரதிபலிக்கவில்லை என்றும், இவ்வாறான நிகழ்வுகளின் வெறும் ஐந்து வீதமான சம்பவங்களே காவற்துறையினரிடம் முறையீடு செய்யபடுவதாகவும் மிகுதி முறையீடு செய்யபடாமல் விடுவதாகவும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. பாதிக்கபட்ட மாணவிகளின் 57 வீதமானோர் இதுபற்றி தமது சக நண்பிகளிடம் கூறியுள்ளனர். வளர்ந்தோரிடம் இதுபற்றி முறையிடுவதில்லை. இருப்பனும் 42 வீதமான பிள்ளைகள் தமது பெற்றோரிடம் அல்லது ஆசிரியரிடம் முறையிடுகின்றனர்.
முறையிடபட்ட ஐந்து வீதமான மாணவிகளில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் அதனை வாபஸ் வாங்கியுள்ளனர். இவர்களின் 36 வீதமானோர் இதனை தாம் பெரிய விடயமாக கருதவில்லை என்றும் 32 வீதமானோர் காவற்துறையால் இவ்விடயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளனர். சூரிச் பல்கலைக்கழக கல்வி ஆய்வு ஆணையகத்தினால் 1999,2007 ம் ஆண்டுகளில் இருமுறை மேற்கொள்ளபட்ட இவ்வாய்வுகளுக்காக மூன்றாவது மேல்நிலை வகுப்புகளில் கல்விகற்கும் 5000 மாணவ, மாணவிகள் தம்மை இனங்காட்டாத ரீதியிலான 29 பக்க கேள்விகொத்தை நிரப்பியுள்ளனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|