 சுவிஸ் தமிழர் இல்லத்தின் ஒன்பதாவது தமிழர் விளையாட்டுவிழா 2008, சூரிச் மாநிலத்தில்
வின்ரத்தூர் “ஐஸ்காலே’’ விளையாட்டு அரங்கில் 16.08.2008 சனிக்கிழமை முதல் நாள் நிகழ்வாக ஆரம்பமாகியது. (படத்தொகுப்பு)
காலை 09.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை சூரிச் மாநிலப் பொறுப்பாளர் திரு.ஜெயம் அவர்கள் ஏற்றிவைக்க, தொடர்ந்து தேசியக்கொடியினை சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஏற்றிவைத்தார். விளையாட்டுப்பிரிவுக் கொடியினை விளையாட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.திருக்குமார் அவர்களும், தமிழர்இல்லக் கொடியினை தமிழர்இல்ல ஒருங்கிணைப்பாளர் திரு.மதியழகன் அவர்களும் ஏற்றிவைத்தனர். ஒலிம்பிக்தீபம் விளையாட்டுவீரன் செல்வன். கனிபா காசிவ் அவர்களினால் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. நன்றி உரையை தமிழர் இல்லச் செயலாளர் திரு.தர்மாவும், சிறப்புரையை கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு.அல்பேட் அவர்களும் ஆற்றினர்.
சவ்கவுசன் மாநில மாணவிகளின் உடற்பயிச்சி காட்சியைத் தொடர்ந்து சுவட்டுமைதான நிகழ்வுகளை லவுசான் மற்றும் சவ்கவுசன் மாநில தமிழர் இல்லத்தினர் நடாத்தினர்.
காலையில் ஆரம்பமான உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட, தாச்சி சுற்றுப்போட்டிகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிவுற்றது. இப்போட்டிகளில் நோர்வே, பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க் நாட்டு அணிகளுடன் சுவிஸ் அணிகளும் பங்குபற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்வையாளர் போட்டிகளாக சங்கீதக் கதிரை, முட்டி உடைத்தல் மற்றும் களிப்பூட்டும் போட்டிகளும் நடைபெற்றது.
சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் 16.08.2008 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிவுற்றது.
தொடர்ந்து 16.08.2008 சனிக்கிழமை போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவமும் இனிதே முடிவுற்றது.
சுவட்டுமைதான மெய்வன்மைப் போட்டிகள்,
சிறார்களுக்கான சுவட்டுமைதான மெய்வன்மைப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் ஆண்-பெண்கள் என தனித்தனி போட்டிகள் நடைபெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற சிறார்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 5, 7. 9, 11, 15 வயதுப் பிரிவுகளாக நடாத்தப்பட்டு, ஒவ்வொரு வயதுப் பிரிவினர்களுக்குமான சிறந்த விளையாட்டு வீரர் தெரிவுசெய்யப்பட்டு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருது பெற்றோர் விபரம்:
ஆண்கள் பிரிவில்,
5வயதுப் பிரிவு: இலக்கியன் 7வயதுப் பிரிவு: (1) யற்சிகன் (2) றுபின்சன் 9வயதுப் பிரிவு: கனுசன் 11வயதுப் பிரிவு: பிரவின் 13வயதுப் பிரிவு: நிரோஜன் 15வயதுப் பிரிவு: மதுசாந்
பெண்கள் பிரிவில்:
5வயதுப் பிரிவு: மிதுனா 7வயதுப் பிரிவு: ஸ்நேகா 9வயதுப் பிரிவு: சேதுங்கா 11வயதுப் பிரிவு: (1) ஆர்த்திகா (2) சுஜிந்தா 13வயதுப் பிரிவு: தாரணி 15வயதுப் பிரிவு: மிர்ணா
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி விபரம்: (சனி)
11வயதுப் பிரிவில்,
3ம் இடத்தை ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகமும், 2ம் இடத்தை இளம் சிறுத்தைகள் வி.கழகமும், 1ம் இடத்தை நோர்வே ஸ்ரோனர் வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீரனாக நேர்வே ஸ்ரோனர் வி.க. வீரன் செல்வன். ரம்மியன் தனரட்னா அவர்கள் (இல.10) தெரிவுசெய்யப்பட்டார். சிறந்த பந்துக்காப்பாளராக நோர்வே ஸ்ரோனர் வி.கழக வீரன் செல்வன் வையகன் சொக்கநாதன் அவர்கள் தெரிவானார்.
15வயதுப் பிரிவில்,
3ம் இடத்தை வானவில் வி.கழகமும், 2ம் இடத்தை இளம் சிறுத்தைகள் வி.கழகமும், 1ம் இடத்தை தமிழ்யுத் வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீரனாக தமிழ்யுத் வி.க. வீரன் செல்வன். கனிபா காசிவ் (இல.10) அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
சிறந்த பந்துக்காப்பாளராக தமிழ் யுத் வி.கழக வீரன் செல்வன் சஜீகன் சிறிதரன் அவர்கள் தெரிவானார்.
வளர்ந்தோர் பிரிவில்,
3ம் இடத்தை டென்மார்க் ழுவுளுஊ வி.கழகமும், 2ம் இடத்தை பிரான்ஸ் வி.கழகமும், 1ம் இடத்தை தமிழ் இளநட்சத்திர வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீரனாக தமிழ் இளநட்சத்திர வி.க. வீரன் செல்வன். செல்லத்துரை நிசாந் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். சிறந்த ஆட்டநாயகனாக தமிழ் இளநட்சத்திர வி.கழக வீரன் செல்வன் தங்கராசா அகிந்தன் அவர்களும், சிறந்த பந்துக்காப்பாளராக பிரான்ஸ் வி.கழக வீரன் செல்வன் தயாளன் கொன்சப் அவர்களும் தெரிவானார். சிறந்த விளையாட்டுக் கழகமாக பிரான்ஸ் வி.கழகம் தெரிவானது.
தாச்சி சுற்றுப்போட்டி
ஆண்கள் பிரிவில்,
2ம் இடத்தை லக்கி ஸ்ரார் வி.கழகமும், 1ம் இடத்தை புறூக் வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீரனாக லக்கிஸ்ரார் வி.கழக வீரன் செல்வன்.தவராசா தனூஸ் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
பெண்கள் பிரிவில்,
2ம் இடத்தை பாலாஅண்ணா வி.கழகமும், 1ம் இடத்தை லீஸ் தமிழ்இளநட்சத்திர வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீராங்கனையாக லீஸ் தமிழ்இளநட்சத்திர வி.கழக வீராங்கனை கயிலைநாதன் அர்ச்சனா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலதிக படங்கள்
கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின்,
5பேர் (ஓவர்-கேம்) ஆண்கள் போட்டியில், 2வது இடத்தை இலண்டன் மஞ்சள் வி.கழக அணியும், 1வது இடத்தை சூரிச் வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீரனாக இலண்டன் மஞ்சள் வி.கழக வீரன் சிவசுப்பிரமணியம் குணாளன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
இரண்டாம்நாள் நிகழ்வுகள் (ஞாயிறு -17.08.2008)
இரண்டாம்நாள் நிகழ்வுகள் ஞாயிறு (17.08.2008) காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகியது. காலை 09.00 மணிக்கு பொதுச்சுடரினை சூரிச் மாநிலப் பொறுப்பாளர் திரு.ஜெயம் அவர்கள் ஏற்றிவைக்க, தேசியக்கொடியினை சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அவர்களும், விளையாட்டுப்பிரிவுக் கொடியினை விளையாட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.திருக்குமார் அவர்களும், தமிழர்இல்லக் கொடியினை தமிழர்இல்ல செயலாளர் திரு.தர்மா அவர்களும் ஏற்றிவைத்தனர். ஒலிம்பிக்தீபம் கராத்தே போதனாசிரியர் கௌரிதாசன் அவர்களினால் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. சுவிஸ் தமிழர் இல்ல மாணவர்களின் கராத்தே வெளிப்பாட்டு நிகழ்வு சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது. தொடர்ந்து கறுப்புப்பட்டி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் சுவிஸ் கிளைப்பொறுப்பாளரினால் வழங்கிக் கவுரவிக்கப்பட்டனர்.
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி விபரம்: (ஞாயிறு)
9வயதுப் பிரிவில்,
3ம் இடத்தை தமிழர் ஒன்றிய வி.கழகமும், 2ம் இடத்தை ஒஸ்கா வி.கழகமும், 1ம் இடத்தை இளம்தென்றல் வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீரனாக இல.11, இளம்தென்றல் வி.கழக வீரன் அரியரத்தினம் ரதிஷன் அவர்களும் சிறந்த பந்து காப்பாளனாக இல்1, ஒஸ்கா வி.கழக வீரன் அன்ரனி டியோனிஸ் அவர்களும் தெரிவாகினர்
13வயதுப் பிரிவில்,
3ம் இடத்தை தமிழர் ஒன்றிய வி.கழகமும், 2ம் இடத்தை ஈழவர் வி.கழகமும், 1ம் இடத்தை தமிழ் இளநட்சத்திர வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீரனாக இல. 11 ஈழவர் வி.கழக வீரன் கந்தையா நிரோஜன் அவர்களும், சிறந்த பந்து காப்பாளனாக இல.1 பாடும்மீன் வி.கழக வீரன் அன்றோன் ரெஜி அவர்களும் தெரிவாகினர்.
17வயதுப் பிரிவில்,
3ம் இடத்தை பிரான்ஸ் வி.கழகமும், 2ம் இடத்தை இளம் சிறுத்தைகள் வி.கழகமும், 1ம் இடத்தை தமிழ் இளநட்சத்திர வி.கழகமும் பெற்றுக்கொண்டது.
சிறந்த விளையாட்டு வீரனாக இல.10, பிரான்ஸ் வி.கழக வீரன் துறைசாச் அவர்களும், சிறந்த பந்து காப்பாளனாக இல.1, பிரான்ஸ் வி.கழக வீரன் நகுலேஸ்வரன் லக்ஷன் அவர்களும் தெரிவாகினர்.
21வயதுப் பிரிவில்,
3ம் இடத்தை பிரான்ஸ் வி.கழகமும், 2ம் இடத்தை நெதர்லாந்து வி.கழகமும், 1ம் இடத்தை பிரித்தானியா வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீரனாக இல.15, பிரித்தானியா வி.கழக வீரன் கமலன் நிவுதன் அவர்களும், சிறந்த பந்து காப்பாளனாக இல.1, நெதர்லாந்து வி.கழக வீரன் ரஜீபா சிறிவரன் அவர்களும் சிறந்த ஆட்டநாயகனாக இல.1, பிரித்தானியா வி.கழக வீரன் ரொசாக் பரமன் அவர்களும் தெரிவாகினர்.
30வயதுப் பிரிவில்,
3ம் இடத்தை ஒலிம்பிக் வி.கழகமும், 2ம் இடத்தை பிரித்தானியா வி.கழகமும், 1ம் இடத்தை பிரான்ஸ் தெரிவு அணியும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீரனாக பிரான்ஸ் தெரிவுஅணி வீரன் சுரேஸ் பவளவேல் அவர்களும், சிறந்த பந்து காப்பாளனாக பிரான்ஸ் வீரன் தயாளன் கொன்சப் அவர்களும் தெரிவாகினர்.
பெண்கள் பிரிவில்,
3ம் இடத்தை சோதியா வி.கழகமும், 2ம் இடத்தை ஒளிநிலா வி.கழகமும், 1ம் இடத்தை இளம் சிறுத்தைகள் வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இல.14, இளம் சிறுத்தைகள் வி.கழக வீராங்கனை அகல்யா கணேஸ் அவர்களும், சிறந்த பந்து காப்பாளராக இல.1, இளம்சிறுத்தைகள் வி.கழக வீராங்கனை சுவேதா குலநாயகம் அவர்களும் தெரிவாகினர்.
மென்பந்து துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டியில்,
2ம் இடத்தை சுவிஸ்போய்ஸ் வி.கழகமும், 1ம் இடத்தை சூரிச் வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சுற்றுப்போட்டியின் சிறந்த வீரனான சூரிச் வி.கழக வீரன் சச்சிதானந்தம் ரமணன். இறுதி ஆட்டத்தின் சிறந்த வீரனாக சூரிச் வி.கழக வீரன் பாலசிங்கம் பானுதரன். சிறந்த சகலதுறை ஆட்டக்காரனாக சுவிஸ்போய்ஸ் வி.கழக வீரன் மில்பாகம ஸ்மித். சிறந்த பந்துவீச்சாளனாக சூரிச் வி.கழக வீரன் இராசமாணிக்கம் திவாகரன. சிறந்த துடுப்பாட்ட வீரனாக சுவிஸ்போய்ஸ் வி.கழக வீரன் இராஜரட்ணம் ரதீஸ் ஆகியோர் தெரிவாகினர்.
வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில்,
2ம் இடத்தை லவுசான் சோதியா வி.கழகமும், 1ம் இடத்தை சவ்கவுசன் மாலதி வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீராங்கனையாக சொலத்தூண் வி.கழக வீராங்கனை சுகன்யா செல்வம் அவர்கள் தெரிவானார்.
கரப்பந்தாட்டம் செற்-அப் ஆண்கள் பிரிவில்,
நெதர்லாந்து வி.கழகம் 2ம் இடத்தையும், ஜேர்மனி ஐக்கிய வி.கழகம் 1ம் இடத்ததையும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீரனாக ஜேர்மனி ஐக்கிய வி.கழக வீரன் துரைராசா விஜயரஞ்சன் தெரிவானார்.
கரப்பந்தாட்டம் செற்-அப் பெண்கள் பிரிவில்,
2ம் இடத்தை லுசேர்ன் வானவில் வி.கழகமும், 1ம் இடத்தை சொலத்தூண் வி.கழகமும் பெற்றுக்கொண்டது. சிறந்த விளையாட்டு வீராங்கனையாக சொலத்தூண் வி.கழக வீராங்கனை யசிதா லோகநாதன் தெரிவானார்.
குறிபார்த்துச் சுடும் போட்டியில்,
3ம் இடத்தை சின்னத்தம்பி சயந்தன் அவர்களும், 2ம் இடத்தை நாகரட்ணம் ஜெகன் அவர்களும், 1ம் இடத்தை அந்தோனிப்பிள்ளை அன்ரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
தகவல் தமிழர் இல்லம்
|