| சுவிஸின் பிரபல கட்டிட ஒப்பந்த நிறுவனம் மோசடி! |
|
|
| பவான் | |
| 23. August 2008 18:57 | |
|
சுவிஸின் பல பகுதிகளிலும் உள்ள ‘அல்ஸ்டம்’ அலுவலகங்களில் சுவிஸ் நிர்வாகிகள் கடும் தேடுதல் நடத்தியுள்ளனர். இந்த தேடுதலானது சட்டவிரோத கொடுக்கள் வாங்கல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். சட்டத்தரணி அலுவலகத்தின் தகவலின்படி இந்த தேடுதலின்போது ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர் மீது நிர்வாக சீர்கேடு,இலஞ்சம் மற்றும் பணமோசடி போன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேடுதலில் சுவிஸ் பொலிஸாருடன் இணைந்து பிரன்ஸ் பொலிஸ் அதிகாரிகளும் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அல்ஸ்டம்’ அலுவலகங்கள் மற்றும் ‘அல்ஸ்டம்’ நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளும் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அல்ஸடம்’ நிறுவனத்துடன் தொடர்புடைய வேறு நிறுவனங்களும் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியுள்ளதாகவும் சில சந்தர்ப்பங்களில் இதன்மூலம் கட்டிட ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாகவும் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சட்டத்தரணிகள் அலுவலகத்தின் அறிக்கையின் படி இந்த தேடுதலுக்கும் சட்ட அமுலாக்கல் நிறுவனத்தினால் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் ‘அல்ஸ்டம்’ நிறுவன நபர்களுக்கெதிரான வழக்குகளுக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





சுவிஸின் பிரபல பிரன்ஸ் பொறியியல் நிறுவனமான ‘அல்ஸ்டம்;’ சுவிஸ் பொலிஸாரினால் தீவிர சோதனையிடப்பட்டுள்ளது.

