21. November 2008 15:08
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
4. October 2008 12:47
19. August 2008 23:28
13. October 2008 13:01
12. October 2008 00:13
21. August 2008 23:30
லிபியாவுடனான பேச்சுவார்த்தை தொடர்கின்றது - சுவிஸ் வெளிநாட்டமைச்சு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
23. August 2008 19:06

bern___lebya.jpgலிபியாவுடனான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்வதாகவும் ஆனால் முடிவு எட்டப்படும் கால எல்லையை குறிப்பிட முடியாது எனவும் சுவிஸ் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை வெளிநாட்டமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இந்த பிரச்சினை தொடர்பாக லிபிய அரசுடன் நம்பிக்கையுடனும் ஒத்துழைப்புடனும் பேச்சுவார்த்தைகளை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவின் குடிவரவு விதிகளை மீறிய இரண்டு சுவிஸ் பிரஜைகள் தொடர்ந்தும் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அதேவேளை முக்கியமான தேவைகள் இன்றி லிபியாவுக்கு செல்லவேண்டாம் என சுவிஸ் சுற்றுலா பயணிகளை வெளிநாட்டமைச்சு எச்சரித்துள்ளது.

குடந்த ஜுலை 15ஆம் திகதி லிபிய ஜனாதிபதி மஹ்முட் கடாபியின் மகனான கனிபரும் அவரது கற்பிணியான மனைவியும் விடுதி பணியாளர் ஒருவரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஜெனிவாவில் உள்ள விடுதி ஒன்றில்வைத்து கைதுசெய்யப்பட்டு இரண்டு நாட்கள் தடுத்துவைக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட சம்பவமானது இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலையை தோற்றுவித்திருந்தது.

வழக்கறிஞர்கள் இவ்விருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் வாபஸ்பெராதுள்ள அதேவேளை லிபியாவானது இந்த கைதுகள் தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் மன்னிப்புக்கோரவேண்டும் என வலியுறுத்திவருகின்றது.

 
< முந்தைய   அடுத்த >