21. November 2008 14:37
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
3. October 2008 18:45
15. October 2008 12:52
19. August 2008 23:28
27. August 2008 15:01
உணவுப்பற்றாக்குறை,காலநிலை மாற்றம் உலகுக்கு பெரும் சவால் - மிஸ்ஸெலின் கால்மி ரே அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
23. August 2008 19:13

swiss_forien_minis.jpgஉணவுப்பற்றாக்குறையும் காலநிலை மாற்றமும் உலக நாடுகளின் அபிவிருத்திக்குள்ள பாரிய சாவல்கள் ஆகுமென சுவிஸ் வெளிநாட்டமைச்சர் மிஸ்ஸெலின் கால்மி ரே தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை சுவிஸில் இடம்பெற்ற அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பின் வருடாந்த கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.

உலக நாடுகள் உற்பத்தி மற்றும் தன்னிறைவு என்பனவற்றில் புரட்சி ஒன்றை ஏற்படுத்துவதே இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு என குறிப்பிட்டார்.

மீக்கொங் பிராந்தியமானது இதற்கு சிறந்த உதாரணமாக விளங்குவதாகவும் இந்த வழிமுறையை உலகின் வறிய நாடுகள் பின்பற்றலாம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் வியட்நாம், லாவோஸ் நாடுகள் இது தொடர்பாக அரசு தனியார் மற்றும் மக்களும் இணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதையும் இவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் சுவிஸினது நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள அதேவேளை உலக நாடுகளின் உதவிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 
< முந்தைய   அடுத்த >