| வெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து விமானம் அவசர தரையிறக்கம் |
|
|
| பவான் | |
| 24. August 2008 16:59 | |
|
நேற்று சனிக்கிழமை சுவிஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு சொந்தமான எயார்பஸ் ஏ 301 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. சுவிஸ் விமான நிலைய அலுவலகத்துக்கு கிடைத்த அவசர தகவலை அடுத்தே இந்த விமானம் ஜெனிவா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த அவசர தரையிறக்கத்தின்போது எந்தவொரு பயணியும் காயமடையவில்லையென சுவிஸ் விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த விமானத்தில் 142 விமான பயணிகளும் ஆறு சிப்பந்திகளும் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ள போதிலும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேடுதல் நடவடிக்கைக்காக விமான நிலையம் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் மூடப்பட்டதாகவும் எட்டு விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவொரு தவறான தகவலாக இருக்கலாம் என ஜெனிவா விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





வெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து சூரிச்சில் இருந்து மலாக்கா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

