| சுவிஸ் மாணவர்களிடம் குறைந்துசெல்லும் ஒழுக்கம் |
|
|
| பவான் | |
| 24. August 2008 19:25 | |
|
இந்த கட்சியின் தலைவர் டோனி பேர்னர் தெரிவிக்கையில், சுவிஸ் பாடசாலைகளின் வகுப்பறைகளில் மாணவர்களின் ஒழுக்கம் குறைவாக இருப்பதாகவும் விளையாட்டு மைதானங்களில் வன்முறைப்போக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலைமையானது தற்போதைய கல்விக்கொள்கையின் தோல்வியின் எதிரொலியெனவும் தெரிவித்தார். மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கு ஒரு புதிய கல்விக்கொள்கை அவசியம் எனவும் வலியுறுத்தினார். இந்த கட்சியின் தீர்மானமானது 332 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கட்சியானது கல்வி சம்பந்தமான புதிய கொள்கை ஒன்றை பின்பற்ற போவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஆசிரியர்கள் வகுப்பறையில் ஒழுக்கத்தை நிலை நாட்டகூடியவர்களாக இருக்கும் அதேவேளையில் தேவை ஏற்படும் பட்சத்தில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் இருந்து இடை நிறுத்தலாம் எனவும் தெரிவித்தார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|






சுவிஸின் ‘ரையிட்விங்’சுவிஸின் மக்கள் கட்சியானது சுவிஸ் மாணவர்கள் பாடசாலைகளில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை வலிறுத்தியுள்ளது.

