| 2000 சுவிஸ் பிரஜைகள் வாக்களிக்கமுடியாமல் தடுக்கப்பட்டனர் - சுவிஸ் குடியரசு அலுவலகம் |
|
|
| பவான் | |
| 26. August 2008 17:25 | |
வெளிநாடுகளில் வாழும் சுமார் 2000க்கும் மேற்பட்ட சுவிஸ் பிரஜைகள் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்பட்டதாக சுவிஸ் குடியரசு அலுவலகம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் சுவிஸ் பிரஜைகளுக்கு அனுப்பப்படும் வாக்காளர் விண்ணப்பபடிவங்கள் உரிய காலப்பகுதியில் அவர்களுக்கு கிடைக்காமையே இவற்றுக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வெளிநாடு வாழ் சுவிஸ் பிரஜைகளும் விண்ணப்பபத்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக சுவிஸ் அமைப்பு ஒன்றில் பதிவுசெய்யபடுகின்றார்கள். இதேபோன்று வெளிநாடுகளில் வாழும் சுவிஸ் வாக்காளர்களுக்கு அனுப்புவதற்கென விசேடமான சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றபோதிலும் அவை எப்பொழும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதேபோல் அனுப்பப்படும் வாக்காளர் பத்திரங்கள் பிழையான மொழிகளிலும் அனுப்பப்படுகின்றன.இதன் காரணமாக வாக்காளர்களால் போதிய தகவல்களை பெறமுடியாமல்போயுள்ளது. குறித்த வாக்காளர் பத்திரங்கள் சுவிற்சர்லாந்தின் உத்தியோகபூர்வ மொழிகளான ஜேர்மன்,பிரேஞ்சு,இத்தாலியன் ஆகியவற்றின் மூலம் கோரப்பட்டிருக்கவேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான குறைபாடுகள் இடம்பெறாமல் இருக்க குடியரசு அலுவலகமானது குறித்த அமைப்புகளுக்கு சுட்டிக்காட்டுமாறு அனைத்து பிராந்தியங்களுக்கும் எழுத்து மூலமாக வேண்டுகோள்விடுத்துள்ளது. இதேவேளை சுவிஸ் வெளிநாட்டவர்களுக்கான அமைப்பானது தனது வருடாந்த ஒன்றுகூடலின்போது இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறையை ஏற்படுத்த வேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





வெளிநாடுகளில் வாழும் சுமார் 2000க்கும் மேற்பட்ட சுவிஸ் பிரஜைகள் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்பட்டதாக சுவிஸ் குடியரசு அலுவலகம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

