21. November 2008 11:07
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
12. October 2008 00:13
27. August 2008 15:01
13. October 2008 13:01
29. September 2008 22:52
பிரான்ஸில் இடம்பெற்ற பனிச்சரிவில் சிக்கிய மூன்று சுவிஸ் பிரஜைகளை காணவில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
26. August 2008 17:39

mount_blanc.jpg

பிரான்ஸின் சவோய் பிராந்தியத்தில் பனிமலைச்சரிவில் சிக்கிய மூன்று சுவிஸ் பிரஜைகள் உட்பட எட்டுப்பேரை தேடும் பணி அங்கு தொடர்ந்து பனிச்சரிவு ஏற்படும் அபாயம் தென்பட்டதன் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவோய் பிராந்தியத்தின் மொன்ட்பிளாங்கின் வடக்குப்புறத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிமலை சரிவு ஏற்பட்டதாக பிரான்ஸின் சவோய் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் ஐந்து பிரென்ஸ் நாட்டவர்களும் மூன்று இத்தாலிய நாட்டவர்களும் மீட்க்கப்பட்டு அருகிலுள்ள சமொனிக்ஸ் மற்றும் சலான்செஸ் வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று ஹெலிகொப்டறில் சென்ற 40 மீட்பு பணியாளர்களும் 14 மலையேறு வழிகாட்டிகள் மற்றும் மோப்பநாய்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தொடர்ந்தும் அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருந்ததன் காரணமாக குறித்த மீட்பு பணி இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிக்கியதாக கூறப்படும் மூன்று சுவிஸ் பிரஜைகளும் ஐந்து அவுஸ்ரேலிய பிரஜைகளும் உயிருடன் இருப்பதற்கான சந்தர்ப்பம் இல்லையென அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பிக்கெல் அல்லியற் மரி தெரிவித்துள்ளார்.

 
< முந்தைய   அடுத்த >