21. November 2008 12:45
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
15. October 2008 12:52
19. August 2008 23:28
4. October 2008 12:47
21. August 2008 23:30
மியன்மாருக்கு சுவிஸ் 4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
28. August 2008 19:40

swiss-map.pngமியன்மாரில் ஏற்பட்ட சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு சுவிஸ் சொலிட்டாரிடி மூலமாக சுவிஸ் அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து 4 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையில் அரைவாசிப்பணத்தை அவசர உதவி நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் மிகுதி பணம் உதவி அமைப்புகள் மேற்கொள்ளவுள்ள மீள்கட்டுமானப்பணிகளுக்கு செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி நடவடிக்கைகளுக்கெதிராக அந்நாட்டு படைகள் செயற்படுகி;ன்றபோதிலும் அங்குள்ள மக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் அறிந்துவைத்திருப்பதாக சுவிஸ் சொலிட்டாரிடி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த உதவித்திட்டம் மூலம் பாதிக்கப்பட்ட 15000பேருக்கு தம்மால் படுக்கைகள்,உடைகள்,சுகாதார உபகரணங்கள்,மற்றும் நுழம்பு வலைகள் வழங்கமுடிந்ததாக ஏ.டி.ஆர்.ஏ.என்ற உதவி வழங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

மியன்மாரில் கடந்த மே மாதம் 2ஆம் திகதி ‘நார்க்கிஸ்; சூறாவளியால்; 140,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளமை குறிப்பித்தக்கது.

 
< முந்தைய   அடுத்த >