| கொழும்பு மற்றும் வத்தளையில் துப்பாக்கிசூடு - மூவர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 28. September 2008 12:40 | |
|
கொழும்பு மற்றும் வத்தளை பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு 9.00மணியளவில் வத்தளை பள்ளியாவத்தை கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் சிங்கள இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். கடற்கரையில் மது போதையில் இருந்த மேற்படி இளைஞர்குளை அப்பகுதியில் இருந்து செல்லுமாறு கடற்படையினர் பணித்ததாகவும் இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து கடற்படையினர் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கொழும்பு புறக்கோட்டையின் பிரதான வீதியில் நேற்று இரவு 11மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். புpரதான வீதியில் இருக்கும் உணவு வீடுதிக்கு முன்பாகவே இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் சிங்கள இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாதாள உலககோஸ்டிகளுக்கிடையிலான மோதலாக இருக்கலாம் என புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






