| சிறுபான்மை இனத்தவர்களின் மட்டுமிஞ்சிய கோரிக்கைக்கு இடமில்லை: இராணுவத் தளபதி |
|
|
| வா.கி.குமார் | |
| 28. September 2008 12:59 | |
|
தற்பொழுது வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் ஒரு வருடத்துக்குள் முடிவுக் கொண்டுவரப்பட்டுவிடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். “இந்த நாடு சிங்களவர்களைச் சார்ந்தது என நாம் உறுதியாக நம்புகின்றோம். ஆனால், சிறுபான்மைச் சமூகங்களும் இங்கு இருப்பதுடன், அவர்களையும் சமமாகவே நாங்கள் நடத்துகின்றோம். நாங்கள் நாட்டின் 75 சதவீதமாக இருக்கின்றோம். எனவே, இந்த நாட்டைக் காப்பாற்றும் முயற்சியை ஒருபோதும் கைவிடப்போவதில்லை” என இராணுவத் தளபதி குறிப்பிட்டார். “இது ஒரு பலமான நாடு. அவர்கள் எங்களுடன் இணைந்து வாழமுடியும். ஆனால், மட்டுமிஞ்சிய, ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்து சிறுபான்மை இனங்கள் போராடக்கூடாது” என்று இராணுவத் தளபதி தனது செவ்வியில் குறிப்பிட்டார். “உள்நாட்டு தலைவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுத்துள்ளன. பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்பொழுது வழங்கிவரும் அர்ப்பணிப்பைத் தொடர்ந்தும் வழங்கினால் ஒரு வருடத்துக்குள் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிடமுடியும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக பெருமளவான பொதுமக்கள் கொல்லப்படுவதாக சர்வதேச மனித உரிpமை அமைப்புக்கள் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துரைத்த சரத் பென்சேகா, மோதல்கள் நடைபெறும்போது மோதலுடன் தொடர்பற்றவர்கள் கொல்லப்படுவது சாதாரண நிகழ்வு எனவும் கூறினார். இதேவேளை, கிளிநொச்சியை நோக்கிய இராணுவத் தாக்குதல்கள் அடுத்தவாரம்; ஆரம்பிக்கப்படும் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இராணுவத் தளபதி கூறியிருந்தார். திட்டமிட்டபடி வடக்கை முழுமையாகக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும், அடுத்தவாரம் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். “கிளிநொச்சியை நோக்கிய தாக்குதல்களை அடுத்தவாரம் இராணுவத்தினர் ஆரம்பிப்பர். கிளிநொச்சி நகரிலிருந்து சற்றுத் தொலைவிலேயே இராணுவத்தினர் தற்பொழுது நிலைகொண்டுள்ளனர்” என்றார் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. வன்னியில் மோதல்கள் நடைபெற்றுவருவதால் விடுதலைப் புலிகளின் தலைவர்களின் நடமாட்டங்கள் குறித்த தகவல்கள் தமக்குக் கிடைத்து வருவதாகவும், அவற்றைப் பயன்படுத்தி அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுமெனவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிpலக கூறினார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





இலங்கையிலுள்ள சிறுபான்மை இனத்தவர்கள் மட்டுமிஞ்சிய கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
