5. December 2008 06:11
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
13. October 2008 13:01
11. October 2008 23:48
21. August 2008 23:30
15. October 2008 12:52
மட்டக்களப்பில் மினிமுகாம் மீது புலிகள் தாக்குதல்: 6 பேர் பலி - விடுதலைப்புலிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. September 2008 13:12
ltte_figiters5.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திகிலிவட்டைப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர். ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட திகிலிவட்டைப் பகுதியில்இலங்கை  இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் மினி முகாம் அமைத்திருந்தனர்.

இம்முகாம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தி இம்முகாமைத் தமது கட்டுப்பாட்டில் 15 நிமிடம் வரை வைத்திருந்து அங்கிருந்தவற்றினை தாக்கியழித்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது இலங்கை இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர்.

இதில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

ரி-56 ரக ரக துப்பாக்கிகள் - 05
பிகே எல்எம்ஜி - 01
பிகே ரம் ரவைக்கூடு - 01
பிகே எல்எம்ஜி ரவைகள் - 100
ஏகே ரவைக்கூடு - 09
ஏகே ரவைகள் - 200
கோல்சர் - 01
ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் ஐந்துபேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

 
< முந்தைய   அடுத்த >