| யாழ்.குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் கடுமையான ஷெல், பீரங்கித் தாக்குதல் |
|
|
| வா.கி.குமார் | |
| 28. September 2008 13:25 | |
|
யாழ். குடாநாட்டில் நேற்று சனிக்கிழமை கரையோரப் பகுதிகளை நோக்கி ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் கரையோரப் பகுதி மக்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவியது.
அரியாலை, கொழும்புத்துறை, பாசையூர், குருநகர் கரையோரப் பகுதிகளிலும் மற்றும் வடமராட்சி கரையோரப் பகுதிகளிலும் மேற்படித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நேற்றுக் காலை முதல் நண்பகல் வரை நீடித்த ஷெல் தாக்குதல்களால் கரையோரப் பகுதிகள் அதிர்ந்த வண்ணமிருந்தன. இதேவேளை, அரியாலை கிழக்குப் பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதி கடற்பரப்பில் நேற்று முழு நாளும் தொழிலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். பாசையூர், குருநகர் உள்ளிட்ட குடா கடற்பரப்பிலேயே மேற்படி தொழிலுக்கான அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





