| களுவாஞ்சிகுடியில் குடும்பஸ்த்தர் சுட்டுக்கொலை |
|
|
| வா.கி.குமார் | |
| 28. September 2008 13:37 | |
|
வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் செட்டிபாளையம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த வீரக்குட்டி கோபாலபிள்ளை(53வயது) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செட்டிபாளையம் பிரதான வீதியில் இருக்கும் பிள்ளையான்குழு அலுவலகத்துக்கு பின்புறமாக உள்ள வயல்வெளியிலேயே இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஸ்டலினால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சடலம் இன்று காலை மீட்க்கப்பட்டு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் குடும்பஸ்த்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
