21. November 2008 14:05
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
12. October 2008 00:13
29. September 2008 22:52
3. October 2008 18:45
13. October 2008 13:01
15. October 2008 12:52
அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணி வீரர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு: பி.சி.சி.ஐ. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
PTR.   
28. September 2008 13:58
bcci_logo.jpgஇந்தியாவின் தலைநகர் டில்லியில் மீண்டும் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று இந்தியாவுக்கு கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணிக்கு, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) உறுதியளித்துள்ளது.

டில்லியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் குண்டுவெடிப்பு நடை பெற்றதை அடுத்து அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர்கள் மத்தியில் அச்சம்  ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. எனினும், அவுஸ்திரேலிய அணி திட்டமிட்டபடி இந்தியாவுக்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு நிலைமை குறித்து அவுஸ்திரேலியா சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு இந்தியாவில் விளையாடுவது பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டில்லியில் நேற்று மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதனையடுத்து அவுஸ்திரேலிய வீரர்கள், பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என உறுதி அளித்துள்ளது. குண்டுவெடிப்பை அடுத்து அவுஸ்திரேலிய வீரர்களுக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படுவதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

ஜெய்பூரில் தற்போது பயிற்சி மேற்கொண்டு வரும் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களுக்கு 100 சதவிகித பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், எனவே அவர்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்பட எதுவுமில்லை என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அக்டோபர் 9ஆம் திகதி பெங்களூரில் தொடங்குகிறது. 3வது டெஸ்ட் டில்லியில் நடைபெற உள்ளது.

இதனிடையே, அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களும் குண்டு வெடிப்பால்  அதிகம் பாதிக்கப்படவில்லை. பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவுஸ்திரேலியக் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. சுற்றுப்பயணம் தடையில்லாமல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
< முந்தைய   அடுத்த >