21. November 2008 11:39
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
13. October 2008 13:01
12. October 2008 00:13
11. October 2008 23:48
27. August 2008 15:01
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் தன்னை விடுவிக்கக் கோரி மனு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. September 2008 14:03
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியான ரவிச்சந்திரன் தன்னை விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி ஸ்ரீ பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற வி.ரவிச்சந்திரன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் 14 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவரை விடுதலை செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சென்னை தடா நீதிமன் ரவிச்சந்திரனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 1999 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 19 பேரை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

4 பேருக்கு மரண தண்டனையும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. நளினி, அவருடைய கணவர் முருகன், சாந்தன், அறிவு ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுபின்னர் நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ரவிச்சந்திரன் தவிர ஜெயக்குமார், ரொபர்ட், பயாஸ் ஆகியோருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையும் உயர்நீதிமன்றில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

 

 
< முந்தைய   அடுத்த >