| கிளிநொச்சி மீது கடும் எறிகணைத்தாக்குதல் -5 பொதுமகள்ள படுகாயம் |
|
|
| வா.கி.குமார் | |
| 28. September 2008 14:45 | |
|
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு சந்திப்பகுதியின் மக்கள்குடியிருப்புகள் நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை படையினர் நடத்திய எறிகணைத்தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஏ9 வீதியின் முன்பாகவுள்ள இரணைமடுசந்தியின் 155ஆவது மைல்கள் பிரதேசத்தில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எறிகணைத்தாக்குதலில் இ.ரன்ஞித்குமார்(தர்மபுரம்),ரி.கந்தரூபன்(21வயது)இவரது கால் ஒன்று இழக்கப்பட்டுள்ளது,வீ.சதீஸ்(25வயது)இவர் காரைநகரில் இருந்து இடம்பெயர்ந்து வட்டகச்சிபகுதியில் தமது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார் மற்றும் ஏ.ஜெகன்(30வயது)என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை மற்றும் குமார்(25வயது) என்பவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குமார் என்பவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இளைஞர் ஒருவரது இருகைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இளைஞர் ஒருவரது கால் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





