| அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க பிரதிநிதிகள் அவை ஒப்புதல் |
|
|
| வா.கி.குமார் | |
| 28. September 2008 15:37 | |
|
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டது. செனட் சபை திங்கட்கிழமை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட விவாதத்துக்குப் பின்னர் அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 4.45 மணிக்கு(இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.15 மணி) பிரதிநிதிகள் அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 178 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும், 120 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் வாக்களித்தனர். 10 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும், 107 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தனர். 298-117 வாக்குகளுடன் பிரதிநிதிகள் அவையில் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதற்கு அதிபர் புஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த உதவியாக செனட் சபையும் இந்த ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





