21. November 2008 12:06
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
12. October 2008 00:13
19. August 2008 23:28
29. September 2008 22:52
11. October 2008 23:48
13. October 2008 13:01
இந்திய அரசுக்கு இது பொன்னான சந்தர்ப்பம் பயன்படுத்துமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ஆய்வு: முரசத்திற்காக ஈழப்பிரியன்   
4. October 2008 12:47
நடக்கப் போகும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் காட்சிக்கு ஜாக் பொட் அடிக்கும் சான்ஸ் கிடைத்து இருக்கிறது. அதனைக் காங்கிரஸ் கட்சி பயன் படுத்துமா என்பதே இப்போது உள்ள கேள்வி ? இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கை எல்லை மீறிப் போய் உலக நாடுகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும் நிலைக்கு வந்து விட்டது. இலங்கை இராணுவ வன்னிப் படைக் கட்டளைத் தளத்தின் மீது புலிகள் நடத்திய ஈரூடகத் தாக்குதலில் இரண்டு இந்திய ராடார் பொறியியலாளர் காயம் அடைந்ததால் தமிழகம் கொதிப் படைந்திருக்கிறது.

தமிழின ஆர்வலர்களும் தமிழிக கட்சிகளும் காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ந் திகதி தமிழகத்தில் நடத்திய உண்ணா நோன்பும் எழுச்சி உரைகளும் தமிழகத் தமிழினம் விழித்துக் கொண்டு விட்டதா இல்லையா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும். ஆனால் இது இந்தியாவைச் சரியான பாதைக்குத் திருப்பிவிடச் சிறந்த காலமாக உள்ளது. இந்த வரலாற்றுநச் சந்தர்பம் தமிழிகத் தமிழரிடமே உள்ளது. இன்று எல்லா நாடுகளாலும் ஏற்கப்பட முடியாத திசையில் இலங்கை அரசு செல்கிறது. அதனைத் திருத்தும் ஆற்றல் எந்த நாட்டுக்குமே கிடையாது என அடிக்கடி அதன் தலைவரும் அமைச்சர்களும் இராணுவத் தளபதிகளும் பௌத்த பிக்குகளும் விடுக்கும் அறிக்கைகளே போதிய சான்றுகளாகும். இத்தகைய அரசிடம் எக்காரணம் கொண்டும் இந்திய அரசு அதுவும் தமிழகத் தமிழரின் ஆதரவுடன் இயங்கும் அரசு ஒட்டும் உறவும் வைக்க வேண்டுமா?
 
இன்று தமிழகத்தினது வாக்குப் பலமும் 40 பாராளுமன்ற அங்கத்தவர் எண்ணிக்கையும் காங்கிரஸ் கட்சியினால் உதாசீனப் படுத்துவது ஆபத்தானதாகவே முடியும். ஆசனங்களை எந்தக் கட்சி பெற்றாலும் மத்தியில் கூட்டணி ஆட்சிதானே எனப் பாராமுகமாக இருந்தாலும் உதிரிக் கட்சிகளுடன் குதிரை பேரம் பேசும் போது குட்டி இலங்கையில் நு}ற்றுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் இருப்பது போன்று கட்சிக்கு ஒரு மந்திரி என்ற வகையில் பதவிகள் வழங்கப் பட வேண்டும். இந்நிலை கூட்டணிக் கட்சியில் ஒரு உறுதியற்ற நிலையை நிரந்தரமாக்கி விடும். இது இந்திய நாட்டுக்கும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கும் இந்திய மக்களுக்கும் உகந்தது அல்ல என்ற கடந்த கால கூட்டணி அரசுகள் பட்ட பாடுகளை அறிந்தவருக்குப் புரியும்.

 
உலக அரங்கில் நாடுகளின் சிந்தனை ஒழுங்கு முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதன் தொடக்கப் புள்ளியாக அமைந்தது கொசோவா மக்களின் விடுதலைக் கோரிக்கை அதன் அங்கீகாரமும். நீண்டகாலமாக இருந்த அரசியல் பிரச்சனைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணாது தனது மத வெறிக் கொள்கையை இராணுவ நடவடிக்கைகளால் முன்னெடுத்தது சேர்பிய அரசு. தேசிய ஒருமைப்பாடு தன்னாட்சி இறைமை என்ற காரணங்களைக் காட்டி பகுத்தறிவைக் கட்டிப் போட்டு மனித நேயமற்ற வன்முறை அரசியலை நடத்தியது. அதற்குப் பலியாக இஸ்லாமிய கோசோவோ இன மக்கள் பட்ட பாடு கண்டு கத்தோலிக்க மதமக்களின் மனத்தையும் மனச் சாட்சியையும் தட்டி விட்டதால் மதங் கடந்த மனித நேயம் வென்றது.
 
அதன் பிரிதி பலிப்பாக ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் கத்தோலிக்க மதத்தவராக இருந்தாலும் கத்தோலிக்க சேர்பியர் இஸ்லாமிய கொசோவோ மக்களுக்கு இழைத்த போர்க் குற்றங்களுக்காக கத்தோலிக்க சேர்பியரை நீதிக் கூண்டில் நிறுத்தியுள்ளது. அங்கே மனித நேயமும் சட்டம் ஒழுங்கு நீதியும் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனால் அறத்துக்கும் தர்மத்துக்கும் புகழ் பெற்ற பாரதம் அப்பாவித் தமிழ் மக்களின் நிலப் பறிப்பையும் உயிர் உடமைப் பறிப்iயும் செய்யும் சிங்கள இனவெறி அரசுக்கு துணை நிற்கும் அநியாயம் அகில உலகமும் அறியும். ஆனால் உலகம் எதுவும் அறியாது என நினைத்துக் கண்ணை மூடிப் பால் குடிக்கும் பூனை போன்ற பாரதத்தின் கொள்கை இனியாவது இந்தப் பூனை கண் திறந்து உலக நடப்பை கண்டறிந்து தன்னைத் திருத்திக் கொள்ளுமா ?
 
ஈழத் தமிழரின் சோகக் கதை முடிவின்றித் தொடராக வளரக் காரணமாயிருப்பது இந்திய அரசின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான காழ்ப்பு உணர்ச்சியே அடிப்படைக் காரணியாகத் தெரிகிறது. இதற்கு இலங்கை அரசின் தமிழின அழிப்புக்குத் துணையாக்கப் போட்டு வரும் து}பம் ,மற்றும் வர்த்தக பிராந்திய உறவுகள் ,பாக்கிஸ்தான் சீனாவின் பக்கம் இலங்கை போய்விடக் கூடாது என்ற ஆதங்கம் இந்திய அரசின் நிலைப் பாட்டுக்கு நியாயம் காண முற்படுவது பிரச்சனைக்குச் சரியான தீர்வு காணும் அனுகு முறையாகாது.

ஆய்வு: முரசத்திற்காக ஈழப்பிரியன்

உலகம் அறியச் செய்யப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் போர் நிறுத்த உடன் படிக்கையும் இலங்கையால் கையாளப் பட்ட முறை இந்தியாவும் அறியும். பேச்சு வார்த்தையின்  ஒவ்வொரு கட்ட முடிவிலும் விலாவாரியாக நோர்வே து}துவர் மற்றும் இலங்கை அரசுத் தலைவர்களால் இந்தியாவுக்குத் தெரிவிக்கப் பட்ட இப் பேச்சு யாரால் முறிவு கண்டது என்பது இந்தியாவுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. பேச்சுவார்த்ததை மேசையில் எடுக்கப் பட்ட முடிவுகளை இலங்கை அரசு எந்த அளவுக்கு மீறியது என்பதை உலகமே அறியும். புலிகள் தமது அரசியல் கூட்டங்களில் ஏற்றிய புலிக் கொடிகளைக் கூட போர் நிறுத்த மீறல் எனப் பட்டியலிட்டு அதிக அளவு மீறல்கள் புலிகளதே என்று பிரச்சாரப் படுத்தியதும் உலகம் அறியும்.
 
தன்னிச்சையாகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிட்டதும் முன்னர் கிழக்கிலும் இப்போ வன்னியிலும் கொடூரப் போர் வெறியாட்டம் ஆடுகிறது இலங்கை அரசு. கடந்த 9 மாதங்களாக மன்னார் வன்னிப் பிரதேசங்களில் தினசரி விமானக் குணடு வீச்சுக்களைச் செய்கிறது. நிமிடத்துக்கு 100க்கு மேற்பட்ட எறிகணைகளை செலுத்தும் பல் குழல் பீரங்கித் தாக்குதல்களால் மக்களை இடம் பெயரச் செய்கிறது. உணவு மருந்துத் தடைகளால் உயிருடன் சித்திரவதை செய்யப் படுவதை வெளி உலகம் அறியாவாறு ஊடகத் தடையும் செய்துள்ளது. இப்போது ஐ.நா. அமைப்புகள் உட்பட அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களையும் வெளி யேற்றி அப்பாவி மக்களின் அவலத்தை உலகின் கண்களில் இருந்து மறைக்கிறது. இவற்றைத் தவறு என்று சுட்டிக் காட்டும் எவரும் இலங்கையின் கண்டனத்திலிருந்து தப்ப முடியாது.
 
இலங்கையரசின் அடாவடித்தனங்கள் எல்லை மீறிவிட்டன. தமிழரின் அரசியல் பிரச்சனைக்கு அரசுகள் கடந்த 60 வருடங்களாக அமைதிவழி அரசியல் தீர்வுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் எக்காலத்திலும் அரசியல் தீர்வைக் காணும் மனநிலை கொண்டிருக்கவில்லை. இன்றும் இனியும் அரசு இராணுவ அடக்கு முறைக்கு அப்பால் சிந்திக்க மறுத்து 2500 ஆண்டுகளுக்கு முந்தைய போர் நாகரிகத்தில் சிக்கிக் கிடக்கிறது. இத்தகைய காட்டு மிராண்டி அரசுக்கு இன்றைய நாகரிக உலகம் கைகொடுப்பது மிக மிகக் கேவலமானது. இதில் இந்திய அரசு பங்காளியாக இருக்க வேண்டுமா என மீளாய்வு செய்ய வேண்டும்.
 
இதில் இன்னும் ஒரு பரிதாபம் என்ன வென்றால் தமிழகத் தமிழரின் அரசியல் கட்சிகளான தி.மு.க:,ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்த கூட்டணி ஆட்சி இந்தியாவில் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியிலும் பெருமளவு தமிழகத் தமிழர் உள்ளனர். இவர்களுக்கு இந்த அளவுக்கு ஈழத் தமிழ் மககள் மீதான அக்கரையும் அனுதாபமும் மத்திய அரசால் உதாசீனப் படுத்தப் படுவது மிகப் பெரும் அநியாயம். இதனை உதாசீனம் எனவும் கூறமுடியாது. ஈழத் தமிழினத்தின் சிங்கள இனவெறி அரசுக்கு எல்லாவகையிலும் துணை செய்த படியே அரசியல் தீர்வுதான் இந்தியாவின் நிலை என வாய்க்கு வாய் அறிக்கை விட்டபடியே போரில் முக்கிய பங்காளி போன்று நடந்து கொண்டது மன்னிக்க முடியாத துரோகம்.
 

இன்று உலக அரங்கில் மத மொழி கடந்த மனிதநேயமும் ஐனநாயக விழுமியங்களுமே நாடுகளின் பிரச்சினைகளின் தீர்வுக்கு ஆதாரமாக அமைவதை கொசோவோ, தெற்கு ஒசெற்றியா, அப்காசிய நாடுகளின் தனியரசுப் பிரகடனங்கள் காட்டுகின்றன. இந்தியாவும் இந்நடை முறைக்குச் செல்வதே நியாயமான எதிர்பார்ப்பாகும். இதனை முடிக்கும் ஆற்றல் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை இந்திய மத்திய அரசும் தமிழகத் தமிழ்க் கட்கிகளும் முதலில் நம்பவேண்டும்.
மத அடிப்படையில் பார்த்தாலும் ஐரோப்பிய நாடுகளில் கத்தோலிக்க மதமே பெரும் பான்மையாக உள்ளது. இன்று இஸ்லாம் என்றாலே உலகப் பயங்கரவாதிகள் எனப் பார்க்கப் படும் வேளையில் இஸ்லாமிய மக்களைக் கொண்ட கோசோவா எப்படி விடுதலை விடியலைக் காண முடிந்தது ? அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் எப்படி உதவ முன்வந்தன ?
 
ஈழத் தமிழனம் சந்தித்து வரும் அழிவுகள் உயிர் உடமை இழப்புக்கள் முடிவு இன்றித் தொடருகின்றன. இரவு பகல் அப்பாவத் தமிழ்pப் பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கற்பழிப்பு கடத்தல் கப்பம் என அவர்கள் இலங்கையில் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தப்ப முடியாத அவல வாழ்வு. ஆயினும் அருகில் உள்ள இந்தியா இவை அனைத்துக்கும் துணை போவதுதான் தமிழ் மக்களால் மன்னிக்க முடியாத வரலாற்றுக் குற்றமாக உள்ளது. இதற்கு காங்கிரஸ் தி.மு.க. கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் பதில் சொல்லும் நிலையில் உள்ளன.
 
இன்று உலக உதவி நிறுவனங்களையும் ஐ.நா.அமைப்புகளையும் கட்டாயமாக வெளியேற்றி மனித வேட்டைகளைச் செய்ய முற்படுகிறது சிங்கள அரசு. 2008 ஜனவரி முதல் இன்று செம்டெம்பரிலும் தினம் பல தடவைகள் விமானக் குண்டு வீச்சுகள் எறிகணைகள் கொண்டு இன அழிப்பைச் செய்து வரும் இலங்கை அரசின் அரக்கப் பிடியிலிருந்து 50 வருடங்களுக்கு மேலாகத் தவிக்கும் ஈழத் தமிழினத்துக்கு மட்டும் என் இன்னும் விடியல் வரவில்லை ? இதில் 100ல் ஒரு பங்கு கூட கொசோவோ மக்கள் அனுபவிக்கவில்லை. ஒரு சில நு}று இஸ்லாமிய மக்களின் கொலைக்கு இன்று உலக நீதி மன்றில் வழக்குகள் ! இவை ஏன் எமக்கு மட்டும் இல்லாமல் போகின்றன ? இந்த அவலத்துக்கு தமிழக மற்றும் இந்திய அரசுகள் பங்களிப்பு எத்தகையன என்பதற்கு மக்கள் தீர்ப்பு வழங்கி நீதி காணும் முயற்சியாக வரும் பொதுத் தேர்தல் அமையப் போவது உறுதி. 
 
இலங்கை அரசு வெளிநாடுகளையும் அவற்றின் எந்தவித புத்தி மதிகளையும் ஏற்காமலும் காட்டு மிராண்டித் தனமான கண்டன அறிக்கைகளை விடுத்தும் மனித உரிமை மீறல்களை தமிழ் மக்கள் தொடர்பாக கட்டவிழ்த்து விடும் நிலையிலும் ஏன் கிழக்குத் தீமோர், கொசோவா போன்ற ஒரு அணுகு முறையைக் கடைப்பிடிக்காது தமிழின அழிப்பைப் பார்த்துச் சும்மா இருக்கின்றன ? இந்த அவல நிலைக்கு இந்தியாவின் தும்பைப் பிடிக்காது வாலைப் பிடித்து சிக்கலில் தானும் மாட்டி தமிழ் மக்களையும் வதைக்கும் வெளியுறவுக் கொள்கை எனவே தெரிகிறது. சுர்வதேச சமூகமும் தமிழ் மக்களும் ஏற்கக் கூடிய அமைதி வழியான அரசியல் தீர்வை இனவெறி ஆட்சி செய்யும்  சிங்களம் ஏற்கவோ முன் வைக்கவோ முடியாத மனநிலையில் உள்ளது.
 
அதே வேளை சிங்கள அரசுகள் நடத்தும் ஆட்சிமுறையில் அணுவளவும் ஜனநாயகமோ மனிதாபி மானமோ இல்லாதும் உள்ளமை வெளிப்படை. ஆனால் இந்த உண்மையை அறிய முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளருக்குப் புரியாது உள்ளது. இலங்கை பற்றிப் பல தவறான பிரச்சாரங்களையும் கொள்கைப் பிரகடனங்களையும் nவிளியிட்டும் சிக்களில் தமிழக முதல்வர் மாநில ,மத்திய அரச அதிகாரிகள் வெளியுறவுச் செயலர் ஆலோசகர் பிரதமர் என அனைவருமே மாட்டிக் கொண்டு திருட்டு முழி முழித்த நிகழ்வுகள் மிக அதிகம். கொசோவோ செய்த புண்ணியம் அவர்களுக்கு இந்தியா போன்ற ஒரு அயல் நாடு இல்லாமல் போனது தானா? இதற்கான விடையைத் தமிழகத் தமிழர்கள் புரிந்து கொண்டு விட்டால் தமிழகத் தேர்தலின் முடிவு பெரும் மாற்றம் காணும்.
 
இனறு இலங்கை அரசு ஐ.நா. முதல் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கடும் விமர்சனத்துக்கும் தமிழ் மக்களின் நிலை பெரும் விசனத்துக்கும் உள்ளான நிலையில் நிற்கிறது. இந்நிலையில் சொந்த புத்தியும் இல்லாது சொல் புத்தியும் கேளாது நடந்து கொள்ளும் இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்து என்ன நன்மை காணப் போகிறது?  இந்தியாவின் கண் முன்னாலேயே அதன் பகை நாடுகளான பாக்கிஸ்தான் சீனாவுடன் நெருங்கிய உறுவுகள் வைத்தும் இந்தியாவைக் கடுமையாக விர்சித்து வரும் இலங்கை அரசுடன் கட்டி அழுது என்ன நன்மையைப் பெறப் போகிறது. மூழ்கும் கப்ஆபலில் இருந்து nளியேறும் எலிகளின் புத்தி கூடவா இந்திய அரசுக்கு இல்லாமல் இருக்கிறது ?
 
இந்தியா வெறுமனே தமிழீழத் தாயக அரசு நோக்கிய ஈழத் தமிழீழ அரசை அங்கீகரித்தாலே போதும். அத்துடன் உலக அரங்கில் இந்தியாவும்: தமிழகத் தமிழ்த் தலைவர்களும் உலகத் தமிழர் வரலாற்றில் அழியா இடம் பெற்று விடுவர். இதுவரை தமிpழீழத் தமிழ் இன அழிப்புப் போருக்குத் துணை போன பாவமும் கழுவப் பட்டுவிடும். அடுத்த தேர்தலில் தமிழகத்தில் தமிழரின் அமோக ஆதரவும் தடையின்றிக் ஆளும் அரசுக்குகு; கிடைத்து விடும். இப்படியான பொன்னான சந்தர்ப்பமு வரலாற்றில் கிடைப்பதே அரிது. அத்தகைய ஒரு சந்தர்ப்பம் இப்போ கிடைத்துள்ளது. இந்திய மத்திய மாநில அரசுகள் பயனபடுத்தித் தமிழீழத் தமிழினத்துக்கு உயிர்ப் பிச்சை கொடுக்குமா ?
கருத்துக்கள் (5)
WEERAKOON wrote on October 23, 2008
Title: ...
what a fantastic explanation! but unfortunately INDIA hasn,t been realised the reality.

Vettivel wrote on October 06, 2008
Title: ...
6 October 2008 Papa’s Reflection
The writer has exposed the moral obligation of the Tamil Nadu politicians at this crucial and right moment to act conscientiously for the cause of the Tamils. Tamils are alert and vigilantly expecting the Tamil Nadu Tamils to unite for the right cause of Eelam people.
The typical example is that of Kosovo. It is true that Kosovo’s cause for independence is far less matching compared to the six decade old continuous oppressions of the Tamils by unruly and deceitful and heartless Singhalese politicians. Their vehement and aggressive war of attrition against the Tamils is principally passionate due to mythic belief and racially vicious as that of Hitler who gazed millions of innocent Jews under his program of Holocaust. The Jewish victims were innocent school children, mothers with babies, parents and grandparents. Tamils today are facing a similar ruthless army of Sri Lanka which is well equipped with dangerous mass killing poisonous weapons furnished by Iran and Pakistan while India supports its troops with manpower and technology.
India! Halt your malicious adventurous game of profit seeking tactics while Tamils are being exterminated by shells and bombs!
India! Respect the conscience of International community!
India! Realise and accept that all the NGOs are being ordered out from the warring zone!
India! Accept with humility that you have done more harm by assisting this Genocide of Tamils by lying to the conscience of the world!
India! Accept the crimes that the IPKF had resolutely carried against innocent Tamils of Sri Lanka!
India! Respect the rightful cries of every Tamil who knock at your door!
India! Wake up! Your action allied with Sri Lanka is going to soil your image.
Delhi! It is the moment of history and Tamils of South India are back on the right tract to back you to stand by justice and by the principle of democracy!

Tamils are undergoing untold sufferings under trees and under bridges as the Pakistan, Chinese, Iranian and Indian weapons have destroyed their villages and towns. They are facing deaths through starvation and need of medication. The food and medications donated by Tamils of South India should be allowed to reach our people. Let them render such help through the Red Cross as UK is doing.

Tamils regretfully express that Delhi’s position always has been anti-Tamil. It is part of Tamil history. Today some of Delhi’s amplified rhetoric and lies at this crucial moment has revealed its double game covertly carried out against the lives of Tamils by joining Sri Lanka in this Genocide. It is deplorable and condemnable. Tamil forces’ recent attack at Joseph Military Head Quarters at Vavuniya has brought to light about Delhi’s hand in this foul play. The wounded military officials inside Joseph camp proved the direct involvement and participation of India. Probably the sufferings and tears of Tamils must have brought this treacherous game to the surface. Therefore Delhi joining hands with Colombo should be condemned by every Indians. Consequently it should prompt every man and woman responsible in power in Delhi and South India to change their mind to stand by truth and justice for which the Indians voted them to power to lead the country.
Tamils world over expect that South Indian Tamils should unite and agitate to tame some of the irresponsible Delhi leaders to listen to their call for humanitarian action and for a final and everlasting solution for the Tamils of Eelam to live in peace as respected people on this earth like the Kosova people.

mohan m wrote on October 06, 2008
Title: ...
nice web

Jesudas wrote on October 05, 2008
Title: ...
we are realpartner for the indian,we have talenting figters and the greatfull lieder.we are the thanks full relation too,tamilnadu state is powerfull of the partner indian goverment.we want only accepting our TamilEElam not anything when indiangoverment accept our Homeland TamilEelam the tamils are thanking of our life and The tamilTigers are
powerfull of indian border too,thanks for title

pirakash wrote on October 05, 2008
Title: ...
good news


புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >