|
பங்களாதேஷ்-நியூஸிலாந்து கிரிக்கட் தொடர்: முதலாவது போட்டியில் அதிர்ச்சி அளித்தது பங்களாதேஷ். |
|
|
|
PTR.
|
|
10. October 2008 06:30 |
பங்களாதேஷ்-நியூஸிலாந்து கிரிக்கட் அணிகளுக்கிடையில் டாக்காவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கட் போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 விக்கட் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரலாற்று ரீதியிலான வெற்றியை பங்களாதேஷ் பெற்றது. நியூஸிலாந்துக்கு எதிராக அந்த அணி பெறும் முதலாவது சர்வதேச வெற்றி இது. இதுவரை, இரு அணிகளும் 12 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளன.
முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்களில் 201 ஓட்டங்களை சேர்த்தது. ஆந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜேக்கப் ஓரம் 57 ஓட்டங்களையும், அணித்தலைவர் டானியல் விட்டோரி 30 ஓட்டங்களையும் சேர்த்தனர். புங்களாதேஷின் பந்து வீச்சில் மோர்டசா, ரசாக் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் 79 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து நியூஸிலாந்து தவித்தது குறிப்பிடத்தக்கது. மோர்டசா 4 விக்கட்டுகளையும், ரசாக் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
அடுத்து ஆடிய பங்களாதேஷ் அணி 45.3 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி கண்டது. அந்த அணியின் இடதுகை ஆட்டக்காரர் சித்திக் அபாரமாக 85 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அணித்தலைவர் முஹமட் அஸ்ரபுல் 60 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். "வெற்றிக்குத் தகுதியான அணிதான் பங்களாதேஷ்’ என போட்டியின் முடிவில் நியூஸிலாந்து அணித் தலைவர் டானியல் விட்டோரி தெரிவித்தார்.
|