|
ஆசிய-பசிபிக் மகளிர் டென்னிஸ் அணியின் தலைவராக சானியா மிர்ஷா தேர்வு. |
|
|
|
PTR.
|
|
10. October 2008 06:36 |
மகளிருக்கான உலக சவால் கிண்ண டென்னிஸ் தொடரின், ஆசிய-பசிபிக் அணியின் தலைவராக இந்திய வீராங்கனை சானியா மிர்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹொங்காங்கில் உலக சவால் கிண்ண டென்னிஸ் தொடர் அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இத்தொடரில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆசியபசிபிக் அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இத்தொடருக்கான ஆசிய-பசிபிக் பெண்கள் அணியின் தலைவராக சானியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய அணிக்கு சேர்பியாவின் ஜெலினா ஜோன்கோவிச்சும், அமெரிக்க அணிக்கு வீனஸ் வில்லியம்சும், ரஷ்ய அணிக்கு மரியா ஷரபோவாவும் அணித்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
|