| வெல்லாவெளியில் விசேட அதிரடிப்படையினர் மீது திடீர் தாக்குதல் - 3பேர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 11. October 2008 15:44 | |
|
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.00மணியளவில் வெல்லாவெளி விசேட அதிரடிப்படையினர் முகாமில் இருந்து பாலையடிவட்டை பகுதிக்கு சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். வெல்லாவெளி - பாலையடிவட்டைக்கு இடைப்பட்ட தும்பலை பாலத்துக்கு அருகிலேயே இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலையடுத்து படையினர் தமது கொல்லப்பட்ட காயமடைந் படையினரை தூக்கிக்கொண்டு அப்பகுதியில் இருந்து தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதலில் மூன்று விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
