5. December 2008 06:09
 
 
மட்டக்களப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. October 2008 16:08
women_killd.jpgமட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி,நாவலடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவலடி பிரதேசத்தில் உள்ள பூபதி நினைவு சிலைக்கு 100மீற்றர் தொலைவில் உள்ள கடற்கரை பகுதியிலேயே இந்த சடலம் மீட்க்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 24வயது மதிக்கதக்க இந்த இளைஞன்,பனியன் மற்றும் சாரண் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலைப்பகுதியில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அடையாளங்காண்பதற்காகவும் பிரேத பரிசோதனைகளுக்காகவும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் சடலம் மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
< முந்தைய   அடுத்த >