| மீராவோடையில் சலூனின் மீது கைக்குண்டுத்தாக்குதல் |
|
|
| வா.கி.குமார் | |
| 11. October 2008 16:23 | |
|
இன்று சனிக்கிழமை அதிகாலை 2.45மணியளவில் மீராவோடை பகுதியில் உள்ள மதினா வீதியில் உள்ள முகம்மது இஸ்மாயில் அப்துல் வகாப் என்பவரின் சலூன் மீதே இந்த கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைக்குண்டுத்தாக்குதல் காரணமாக கடைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையெனவும் தெரிவித்தனர். தனிப்பட்ட பகைமை காரணமாகவே இந்த கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவித்தனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் உள்ள சலூன் ஒன்றின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
