|
விடுதலைப் புலிகள் ஜனநாயகத்துக்குத் திரும்பவேண்டும்: ஜனாதிபதி |
|
|
|
வா.கி.குமார்
|
|
11. October 2008 16:36 |
|
ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஜனநாயகத்திற்கு திரும்புமாறு விடுதலைப் புலிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தேசியப் பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாதெனக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, எனினும், யுத்த ரீதியான நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்தினை ஒழிக்கமுடியுமெனவும் கூறினார்.
வடக்கிலுள்ள சாதரண மக்கள் இன்னும் சொற்ப காலத்திற்கே துயரங்களை அனுபவிக்க நேரிடுமெனவும், கிழக்கு மாகாணத்தை மீட்டமை போன்று வடமாகாணத்தையும் மீட்டு மக்களுக்கு சமாதானத்தை உருவாக்கிக் கொடுப்பததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற சர்வகட்சிப் பேரவைக் கூட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் சமூகமளித்திருக்கவில்லை.
முதல் தடவையாக கருணாகுழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா சர்வகட்சிப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோது ஆயுதங்களைக் களைந்து ஜனநாயக நீரோட்டத்திற்குள் பிரவேசிக்க மாட்டார்கள் என கருணா இதன் போது தெரிவித்துள்ளார்.
|