5. December 2008 05:58
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
12. October 2008 00:13
19. August 2008 23:28
27. August 2008 15:01
15. October 2008 12:52
மணலாறில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 2 உடலங்கள் உட்பட ஆயுதங்கள் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. October 2008 19:41

ltte_figiters1.jpgமணலாறில் உள்ள தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில்  படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் படையினரின் இரு உடலங்கள் உட்பட ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு படையினர் பாரிய எடுப்பில் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் முன்நகர்வுத்தாக்குதலை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று பிற்பகல் 6:00 மணிவரை தாக்குதல் நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.

இதில் படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட்டுள்ளன.

ரி-56 ரக துப்பாக்கி - 01, ரி-56-2 ரக துப்பாக்கி - 01, ஆர்பிஜி செலுத்தி - 01, தலைக்கவசங்கள் - 04, ரவைத்தடுப்பு அணிகள் - 04, ரவைத்தாங்கி அணிகள் - 02, பை - 01 உள்ளிட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
 

 
< முந்தைய   அடுத்த >