5. December 2008 05:54
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
11. October 2008 23:48
15. October 2008 12:52
29. September 2008 22:52
19. August 2008 23:28
வைகோ நடத்திய போராட்டத்தில் ஒலி பெருக்கிகள், லாரி அப்புறப்படுத்தப்பட்டது ஏன்?-போலீசார் விளக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
11. October 2008 20:06
vaiko_arrest.jpgவைகோ நடத்திய போராட்டத்தில் ஒலி பெருக்கிகள், லாரி அப்புறப்படுத்தப்பட்டது ஏன்? என்பது பற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

போராட்டம்

2.10.2008 அன்று ம.தி.மு.க. சார்பில் இந்திய அரசு சிங்கள அரசிற்கு ராணுவ உதவி செய்து வருவதாக குறிப்பிட்டு அதை தடுத்து நிறுத்த கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10.10.2008 அன்று காலை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி அருகில் குழுமி, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வரை ஊர்வலம் சென்று அங்கு மறியல் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.

மேற்படி இடம் ஏற்பளிக்கப்பட்ட இடம் அல்ல என்பதாலும், மறியல் போராட்டம் குற்றசெயல் என்பதாலும் மேலும் மேற்படி இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம் என்பதாலும், பெண்கள் கல்லூரி அருகில் உள்ளதாலும் அனுமதி மறுக்கப்பட்டு, அனுமதி மறுப்பு ஆணையை 6.10.2008 அன்று சார்பு செய்யப்பட்டது.

கைது செய்தது ஏன்?

இருப்பினும் 10-ந் தேதி காலை ம.தி.மு.க.வினர் காவல் அனுமதி மறுப்பு ஆணையை மீறி ஏற்பளிக்கப்படாத இடமான காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி அருகில் குழுமியதுடன் போராட்டத்திற்கு வருபவர்கள் உரையாற்ற ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட டிரைலர் லாரி ஒன்றை அனுமதியின்றி கூட்ட மேடையாக பயன்படுத்த முயற்சித்த போது அப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கும், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் இடைïறு ஏற்படும் என்ற காரணத்தினாலும் காயிதேமில்லத் கல்லூரி மாணவிகளுக்கு இடைïறு ஏற்படும் என்ற காரணத்தினாலும் மேற்படி டிரைலர் லாரியும் மற்றும் ஒலிபெருக்கிகளும் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

இதனையும் மீறி போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த தலைவர்கள் ஒலிபெருக்கியின்றி, உரையாற்றி பின்னர், நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் முன்பு மறியல் செய்யும் நோக்கத்துடன் வைகோ தலைமையில் சுமார் 700 பேர் (63 பெண்கள் உள்பட) ஊர்வலமாக செல்ல முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் பிற்பகலில் விடுதலை செய்யப்பட்டனர்.

 

 

 
< முந்தைய   அடுத்த >