| பாகிஸ்தானில் பஸ், விபத்தில் சிக்கியதில் 20 பேர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 11. October 2008 20:20 | |
|
பாகிஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 20 பேர் பலியானார்கள். 11 சிறுவர்கள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து பஞ்சாப் மாநிலத்தில் லோத்ரான் என்ற இடத்தில் நடந்தது. அந்த பஸ்சில் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்கள் உள்பட 100 பேர் பயணம் செய்தனர். காலை வேளையில் பஸ் அதிவேகமாக சென்றதால், டிரைவர் கட்டுப்பாடு இழந்து விட்டார். அப்போது எதிரே வந்த லாரி மீது பஸ் மோதியது. இந்த விபத்தில் பஸ் முழுவதும் சேதம் அடைந்தது. விபத்தில் தப்பி பிழைத்த பஸ் டிரைவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





