| ஈராக்கில் குண்டு வெடித்து பாராளுமன்ற உறுப்பினர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 11. October 2008 20:33 | |
|
காரில் சென்றபோது ஈராக் நாட்டில் உள்ள பாராளுமன்றத்தில் மொத்தம் 275 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 30 எம்.பி.க்கள் மொக்டாதா அல் சதர் என்ற ஷியா மதகுருவின் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் சலே அல் உகைலி. இவர் பாக்தாத்தில் உள்ள ஹபீபீயா மாவட்டத்தில் காரில் சென்றபோது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். இந்த சம்பவத்தில் அவரது பாதுகாவலர்கள் 2 பேரும் பலியானார்கள். பலியான எம்.பி.க்கு 38 வயது தான் இருக்கும். அவர் வரலாற்று பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். பாக்தாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்தவர். அவர் பலியானதற்கு அமெரிக்க தூதர் ரியான் கிராக்கர், அமெரிக்க ராணுவத்தலைமை தளபதி கமாண்டர் ஜெனரல் ரே ஓடியர்னோ ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். ஈராக்கின் ஜனநாயக நிறுவனங்கள் மீதான தாக்குதலாக தான் இந்த குண்டு வெடிப்பை பார்க்கிறோம் என்று அவர்கள் கூறி உள்ளனர். யார் காரணம்? இந்த தாக்குதலுக்கு காரணம் யார் என்பது தெரியவில்லை. ஆனால் அல் சதர் அமைப்பை சேர்ந்த இன்னொரு எம்.பி.யான பாஹா அல் அராஜி கூறுகையில், "ராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில்தான் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. இது திட்டமிடப்பட்ட கொலை தான் என்றும், அரசாங்க ஆதரவு பெற்ற குழுதான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்க இடமிருக்கிறது'' என்றும் குறிப்பிட்டார். குண்டு வெடித்த இடம், அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள இடம் ஆகும் என்றும் மாநில தேர்தல் விரைவில் நடக்க இருக்கிற சூழ்நிலையில்தான் அவர் கொல்லப்பட்டு இருக்கிறார் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் எம்.பி. பாஹா அல் அராஜி தெரிவித்தார். மோதல் உகைலி பலியானதை தொடர்ந்து மொக்டாதா அல் சதர் ஆதரவாளர்களுக்கும், ஈராக்கிய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஆனால் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





ஈராக் நாட்டில் ஷியா மதகுரு மொக்டாதா அல் சதர் அமைப்பைச் சேர்ந்த எம்.பி ஒருவர் சென்ற கார் அருகே குண்டு வெடித்ததில் அவர் பலியானார். இதை தொடர்ந்து அந்த நாட்டில் பெரும் மோதல் ஏற்பட்டது.
